ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள கிளை நூலகம் முற்றிலும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத வகையில் உள்ளது. கட்டிடத்தின் உட்புறத்தில் சிமெண்ட்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தாக இடிந்து விழும் நிலையில் உள்ளது. தற்போது பெய்த மழையின் காரணமாக கட்டிடத்தின் மேற்பகுதி ஈரபதத்துடன் என்நேரமும் விழும் நிலையில் காணப்படுகிறது. ேமலும் நூலகம் வாடகை கட்டிடத்தில் செயல்படுவதால் அதனை சொந்த கட்டிடத்தில் இயக்குவதுடன், கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.