ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து பெங்களூரு வழியாக சிறப்பு ரெயில் நிலையம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் நின்று செல்லும் வழித்தடத்தில் மண்டபம், பரமக்குடி ரெயில் நிலையங்களின் பெயர் குறிப்பிடப்படாமல் உள்ளது. மக்கள் அதிகம் பயணிக்கும் இந்த வழித்தடத்தில் சிறப்பு ரெயில் நின்று செல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. எனவே பயணிகளின் நலன் கருதி மேற்குறிப்பிட்ட வழித்தடத்தில் சிறப்பு ரெயில் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.