பூட்டி கிடக்கும் கட்டிடம்

Update: 2022-08-04 15:56 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் நம்பியான்வலசை கிராமத்தில் கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் பயன்படுத்தாமல் பூட்டியே கிடக்கிறது. தற்போது அந்த கட்டிடம் இடிந்து விழும் நிலையில் மேற்கூறையின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து காணப்படுகிறது. மேலும் அதன் அருகில் உள்ள பொது வினியோகக் கட்டிடம் பயன்படாமல் மின் இணைப்பில்லாமல் உள்ளது. எனவே இந்த கட்டிடங்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதுடன், மின்இணைப்பு பெற்றுத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்