மயிலாடுதுறை மாவட்டம்.ஆறுபாதிஊராட்சியின் விளநகர் கிராம நெடுஞ்சாலையில் அய்யனார் கோவில் வாசலில் பயனற்ற குடிநீர் மோட்டார் அறையை மது அருந்தும் கூடமாக பயன்படுத்தி வந்தனர். இதுதொடர்பான செய்தி "தினத்தந்தி" புகார்பெட்டியில் வெளியானது. இதை தொடர்ந்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பயன்பாடற்ற குடிநீர் மோட்டார் அறையை சீரமைத்தனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் தவறை சுட்டிகாட்டிய தினத்தந்தி நாளிதழையும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளையும் பாராட்டினர்.
பொதுமக்கள், விளநகர்