மயிலாடுதுறை மாவட்டம் எடமணல் கிராமத்தில் இருந்து திருநகரிசெல்லும் சாலையில் அருகில் உள்ள வயல் பகுதிகளில் மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்கு முன்பு சாய்ந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், எடமணல்