திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஆவூர் காந்திநகர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக சுகாதார வளாகம் ஒன்று கட்டப்பட்டது. இந்த கட்டிடம் சேதமடைந்ததால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளது. மேலும், இந்த சுகாதார வளாகத்தை சுற்றி முட்செடிகள், கொடிகள் அதிகளவு வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே, சேதமடைந்துள்ள சுகாதார வளாக கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.