பஸ் நிலையத்தில் சுகாதார கேடு

Update: 2022-08-03 14:49 GMT

சேலம் புதிய பஸ் நிலையம் உள்ளே செல்லும் ஒரு பகுதியில் பொதுமக்களும், பயணிகளும் கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். இதனால் அந்த பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துகொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு, அசுத்தம் செய்யாதீர் என்ற அறிவிப்பு பலகை வைத்தும் எந்தவொரு பயனும் இல்லை. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துவர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-புருஷோத், சேலம்.

மேலும் செய்திகள்