சேலம் ரெயில் நிலையத்தில் நாள்தோறும் ஏராளமான பயணிகள் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். இங்குள்ள நடைமேடைகளில் ரெயில் பெட்டிகளின் எண், நிற்கும் இடங்கள் சில நேரங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படுகிறது. சில நேரங்களில் எல்.இ.டி. டிஸ்பிளே மூலம் ஒளிபரப்பப்படுகிறது. ஆனால் கடந்த சில வாரங்களாக இந்த சேவை சரிவர இல்லை. இதனால் ரெயில்வே பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை சரி செய்ய ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாண்டி, பேர்லேண்ட்ஸ், சேலம்.