திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் வாடா மங்கலம் கிராமத்தில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகிறது. இவை அந்த வழியாக பள்ளிக்கு செல்லும், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கிறது. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் சென்று வருகின்றனர். மேலும், மேய்ச்சலுக்கு சென்று வரும் கால்நடைகளை விரட்டி கடித்து வருகின்றன. வாகனங்களில் செல்பவர்களையும் துரத்தி செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?