கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்கள் வந்து செல்கின்றன. மேலும் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் சென்று வருகின்றன. ஆனால் பஸ்களை நிறுத்துவதற்கு போதிய நடைமேடை அமைக்கப்படாததால் ஆங்காங்கே நிறுத்தபடுகின்றன. இதனால் தாங்கள் செல்லும் பகுதிகளுக்கான பஸ்களை கண்டுபிடிக்க பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறன்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் நிலையத்தில் பஸ் மார்க்கங்களுடன் கூடிய நடைமேடை அமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.