ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் குறைந்த அளவில் உள்ளனர். இதனால் வெளிநோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து மருத்துவம் பார்க்க வேண்டிய நிலை உள்ளது. ஏராளமானோர் வந்து செல்லும் இந்த சுகாதார நிலையத்தை மருத்துவனையாக தரம் உயர்த்த வேண்டும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.