சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்துசெல்கின்றனர். ஆனால் இங்கு பயணிகள் அமரும் வகையில் போதிய இருக்கைகள் இல்லை. இதனால் அவர்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே புதிய இருக்கைகள் அமைக்க வேண்டும்.