கிருஷ்ணகிரி நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. ஜக்கப்பன் நகர், கோஆபரேடிவ் காலனி, மேற்கு இணைப்புச் சாலை ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளை தெருநாய்கள் கூட்டமாக துரத்துகின்றன. இதனால் பலரும் விபத்தில் சிக்கி காயம் அடைகிறார்கள். மேலும் தினமும் தெருநாய்க்கடியால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலசுப்ரமணி, கிருஷ்ணகிரி.
-பாலசுப்ரமணி, கிருஷ்ணகிரி.