தர்மபுரி செந்தில் நகர் அருகே நீச்சல் குளம் அமைந்து உள்ளது. இங்கு நீச்சல் பயிற்சி பெற இளைஞர்கள், சிறுவர்கள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். இந்த நீச்சல் குள வளாகத்தின் நுழைவுவாயில் அருகே உள்ள சுற்றுச்சுவரை ஒட்டி செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. இதனால் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே புதர்களை அகற்றி நீச்சல் குள வளாகத்தை தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜய், தர்மபுரி.
-விஜய், தர்மபுரி.