தக்கலை அருகில் சரல்விளை ஜங்ஷனில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு சரல்விளை, முட்டைக்காடு காலனி, வண்ணான் விளை உள்பட பல கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் வந்து பஸ் ஏறி செல்கின்றனர். மழை பெய்தாலும் வெயிலாக இருந்தாலும் பயணிகள் ஒதுங்க இடம் இல்லை. எனவே இங்கு பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.