திட்டக்குடி நகராட்சியில் இளமங்கலம் உள்பட ஒவ்வொரு வார்டிலும் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான கழிப்பறை கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டது. ஆனால் கட்டியநாள் முதல் இதுநாள் வரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் திறந்த வெளியிலேயே இயற்கை உபாதை கழித்து வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே பூட்டியே கிடக்கும் கழிப்பறை கட்டிடங்களை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.