நாய்கள் தொல்லை

Update: 2022-08-02 15:28 GMT

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள பாத்திமாநகர்,ஆர்.எம்.எஸ்.காலனி, இ.பி.காலனி ஆகிய பகுதியில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் செல்லும் மாணவ-மாணவிகள், சிறுவர், சிறுமிகளை விரட்டி சென்று கடிக்கின்றன. இதன் காரணமாக அவர்கள் சாலையில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், நாய்கள் அந்த பகுதியில் வளர்க்கப்படும் ஆடு,கோழிகளை வேட்டையாடுகின்றன. அதுமட்டுமின்றி வாகனங்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்