தடுப்புச்சுவர் இல்லாததால் விபத்து அபாயம்

Update: 2022-08-02 14:43 GMT

அய்யலூர் அருகே கஸ்பா அய்யலூரில் குருந்தம்பட்டி, கோடாங்கி சின்னான்பட்டி, அய்யலூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலைகளின் சந்திப்பு உள்ளது. இந்த சாலை சந்திப்பு அருகே வரட்டாறு ஓடை செல்கிறது. ஆனால் அந்த ஓடையை ஒட்டிய சாலையில் தடுப்புச்சுவர் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் ஓடையில் தவறிவிழும் சூழல் உள்ளது. மேலும் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் அந்த பகுதி மக்கள், சாலையோரத்தில் சிவப்பு கொடி கட்டி வைத்துள்ளனர். எனவே தடுப்புச்சுவர் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்