செங்கல்பட்டு மாவட்ட ம் மண்ணிவாக்கம் புதுநகர் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத கிண்று ஒன்று உள்ளது. இந்த கிணற்றை அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் குப்பைத்தொட்டியாக பயன்படுத்தி வருகின்றனர். இதில் மருத்துவம் மற்றும் பிளாஸ்டிக் க்கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுகின்றன. மேலும் மழைக்காலங்களில் அதில் மழைநீர் தேங்கி துர்நாற்றமும் வீசுகிறது. தரை மட்டகிணறு என்பதால் கால்நடைகள் தவறி விழுந்து விடுவது வாடிக்கையாகி வருகிறது. அருகில் குழந்தைகள் விளையாடும் போது அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.