அரியலூர் மாவட்டம், கீழக்காவட்டாங்குறிச்சி ஊராட்சியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் ஏழை-எளிய, கூலித்தொழிலாளர்கள் ஆவர். இவர்களின் உறவினர்கள் யாரேனும் இறந்துவிட்டால் அவர்களுக்கான ஈமச்சடங்கு செய்வதற்கு கட்டிடம் இல்லை. இதனால் மழைக்காலங்களில் இவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதியில் ஈமச்சடங்கு கட்டிடம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.