மதுரை மாவட்டம் வில்லாபுரம் அருகே வார்டு வைத்தீசுவரன் தெருவின் பெயர் பலகையின் ஸ்டிக்கர் கிழிந்து போர்டு கீழே விழுந்துள்ளது. இதனால் தெரு பெயர் தெரியாமல் வழிதவறி போகிறார்கள். மேலும் இந்த தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் நிரம்பி சாலைகளிலேயே ஓடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இத்தெரு பலகையை சரிசெய்து கழிவுநீர் கால்வாய்களை தூர்வார வேண்டும்.