சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட வெள்ளையன் ஊருணி பல வருடங்களாக தூர்வாராமல் உள்ளது. இப்பகுதி பொதுமக்களின் நீராதாரத்திற்கு உதவி வரும் இந்த ஊருணியில் ஆகாயத்தாமரைகள், கரையோரங்களில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் ஊருணியில் அடிக்கடி நீர் வற்றி விடுகிறது. எனவே அதிகாரிகள் இந்த ஊருணியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.