ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட முதுகுளத்தூர், தேரிருவேலி, காக்கூர், செல்வநாயகபுரம், விலங்கலத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் பரமக்குடி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை போன்ற பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இதற்காக முதுகுளத்தூர் பஸ் நிறுத்தத்திற்கு இருசக்கர வாகனங்களில் வந்து பஸ்சில் பயணம் செய்கின்றனர். ஆனால் இவர்களது வாகனங்களை பாதுகாக்க வாகன காப்பக வசதி, பஸ் நிலைய வளாகத்தில் இல்லை. அவர்கள் தங்களுக்கு பழக்கமான கடைகளுக்கு முன் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். மாலையில் வீடு திரும்பும்போது அந்த வாகனங்களை எடுத்துச் செல்கின்றன/ இதனால் போக்குவரத்து பாதிப்பு மட்டுமின்றி திருட்டு சம்பவங்களும் நடக்கிறது. எனவே பஸ் நிறுத்த வளாகத்தில் அரசு இருசக்கர வாகன காப்பகம் அமைக்க வேண்டும்.