இடிந்துவிழுந்த பள்ளி சுற்றுச்சுவர்

Update: 2022-08-02 11:25 GMT
தர்மபுரி-சேலம் சாலையில் இலக்கியம்பட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தின் கிழக்கு பகுதியில் உள்ள சுற்றுச்சுவரின் ஒரு பகுதி சேதம் அடைந்து இடிந்து விழுந்துவிட்டது. இதனால் இரவு நேரங்களில் பள்ளியின் உள்ள மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்துவிட்டன. மாணவர்களின் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட துறையினர் விரைவில் நடவடிக்கை எடுத்து பள்ளிக்கு சுற்றுச் சுவர் கட்ட வேண்டும்.
-முத்து, தர்மபுரி.

மேலும் செய்திகள்