விருதுநகர் அருகே கோட்டூரில் பஸ் நிலையம் உள்ளது. இங்குள்ள சித்தர் கோவிலுக்கு பக்தர்கள் ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர். இந்த ஊரில் பஸ்கள் நிறுத்தக்கூடிய இடத்தில் உள்ள பயணிகள் நிழலகத்தின் மேற்கூரை சேதமடைந்து பல மாதங்களாகியும் சரி செய்யப்படாமல் உள்ளது. சேதம் அடைந்த மேற்கூரையை சீரமைக்க விரைவாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.