மாணவர்கள் அவதி

Update: 2022-08-01 16:26 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அனுப்பன்குளம் பஞ்சாயத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அதன் சுற்றுப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சைக்கிளில் பள்ளிக்கு வந்து செல்கிறார்கள். இவர்கள் கொண்டு வரும் சைக்கிள்களை நிறுத்த பள்ளி அருகில் போதிய இடவசதி இல்லாததால் சாலையில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே மாணவர்கள் சைக்கிளை பாதுகாக்கவும், நிழலில் நிறுத்த வசதியாகவும் தேவையான இடத்தை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்