காடாக மாறிய சுடுகாடு

Update: 2022-08-01 15:22 GMT

தஞ்சை மேலவெளி ஊராட்சி களிமேட்டை அடுத்த விடுதலைநகர் பகுதியில் உள்ள சுடுகாடு பராமரிப்பின்றி உள்ளது. இதனால் சுடுகாடு உள்ள பகுதி முழுவதும் கருவேல மரங்கள் வளர்ந்து காடுபோல் காட்சி அளிக்கிறது. மேலும், சுடுகாட்டில் உள்ள கைப்பம்பு சேதமடைந்து காணப்படுகிறது. மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் உடலை எடுத்து வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி, சுடுகாடு விஷப்பூச்சிகளின் கூடாரமாக திகழ்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சுடுகாட்டை சீரமைத்து முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்