தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலுகாக்களில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகின்றன. இதனால் கடந்த 2011-ம் ஆண்டு பட்டுக்கோட்டையில் தென்னை வணிக வளாகம் திறக்கப்பட்டது. இதன் மூலம் தென்னை விவசாயிகள் மிகுந்த பயன் அடைந்து வந்தனர். ஆனால், தற்போது தென்னை வணிக வளாகம் திறக்கப்படாமல் காட்சி பொருளாக உள்ளது. மேலும், வணிக வளாகத்தில் உள்ள எந்திரங்கள் பராமரிப்பின்றி வெயிலிலும், மழையிலும் இருக்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தென்னை விவசாயிகளின் நலன்கருதி மீண்டும் தென்னை வணிக வளாகத்தை திறந்து முறையாக செயல்பட நடவடிக்கை எடுப்பார்களா?