தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையத்தில் பயணிகள் அமருவதற்காக சிமெண்டால் ஆன இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த இருக்கைகள் பெரும்பாலும் பாதிக்கு மேல் மண்ணில் புதைந்தும், சிதிலமடைந்தும் காணப்படுகிறது. இதனால் பயணிகள் இருக்கைகளில் அமருவதற்கு சிரமப்படுகிறார்கள். ஆகவே, இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.