போலீஸ் நிலையத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டப்படுமா?

Update: 2022-08-01 13:30 GMT
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலையத்தின் மூலம் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு உதவிகள் பெற்று வந்தனர். தற்போது இந்த போலீஸ் நிலையம் நன்னிலம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் இயங்கி வருகிறது. தற்போது தாசில்தார் அலுவலகம் சேதமடைந்து உள்ளதால் அது இடிக்கப்பட உள்ளது. இதனால் அத்துடன் போலீஸ் நிலையமும் இடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நிரந்தரமாக போலீஸ் நிலையம் கட்டவேண்டும் என்பது அந்த பகுதி பொதுமக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்