திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தின் வழியாக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பயணிகள் ரெயில், விரைவு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். தற்போது இந்த ரெயில் நிலையத்தில் கொசுக்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் ரெயில் நிலையத்தில் கொசுக்களை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.