கோவை டவுன்ஹால் மணிகூண்டு அருகே பஸ் நிறுத்தத்தில் ஆதரவற்றோர் தங்கும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். அங்கு இயற்கை உபாதை கழித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் அங்கு வந்து செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே ஆதரவற்றோரை காப்பகத்துக்கு அனுப்பி வைக்கவும், பஸ் நிறுத்தத்தை பராமரிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.