வாய்க்கால் பாலத்தில் பள்ளம்

Update: 2022-08-01 12:56 GMT

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா அணிகுதிச்சான் கிராமம் ஆண்டிமடம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு வாய்க்கால் பாலத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் கம்பிகள் மட்டுமே உள்ளது. இந்த பாலத்தின் வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போது இந்த பாலம் முற்றிலும் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்