சமீபத்தில் பெய்த மழையால் சிவகங்கையில் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் செல்லும் சுரங்கபாதையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பாலத்தின் கீழே வாகனங்களை செலுத்த முடியாமல் வாகனஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் மழை பெய்தால் மழைநீர் சரியான முறையில் வெளியே செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.