செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம், முடிச்சூர் சாலை செல்லும் பகுதியில் பாதாள சாக்கடை பணி தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஆனால் பல மாதங்களுக்கு முன்பு கிடப்பில் போடப்பட்ட இந்த பணி இப்போது வரை தொடங்கப்படவே இல்லை. இதனால் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்து ஏற்படுவதற்கும் காரணமாக இருக்கிறது. தினமும் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர். எனவே விபத்துக்கள் எதுவும் ஏற்படும் முன்பு பாதாள சாக்கடை பணியை விரைவில் முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.