கொடுமுடி அடுத்துள்ள சோளக்காளிபாளையத்தில் படித்து வேலை தேடும் இளைஞர்கள் பலர் உள்ளனர். மேலும் அதிக அளவில் மாணவ, மாணவிகளும் இருக்கின்றனர். ஆனால் சோளக்காளிபாளையத்தில் நூலகம் இல்லை. அதனால் அரசின் பொதுத்தேர்வுகளுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்வதில் அவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களின் வாசிப்பு பழக்கத்திற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நூலகம் அமைத்து தருவார்களா?