சிதம்பரம் பஸ் நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கு வசதியாக இருக்கைகள் ஏதும் இல்லை. அதனால் அங்கு வரும் முதியோர்கள், கர்ப்பிணிகள் மற்றும் சிறுவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். நீண்ட நேரமாக பஸ்சுக்காக நின்றபடியே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆகவே பஸ் நிலையத்தில் இருக்கைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.