நிலக்கோட்டை தாலுகா விராலிபட்டி அருகே உள்ள பண்ணைபட்டியில் திறந்தவெளியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. அதை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.