மேம்பாலம் தேவை

Update: 2022-07-31 15:26 GMT

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே கோபாலபுரம் பஞ்சாயத்து அனந்தப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் கால்வாயை கடக்க தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழைக்காலங்களில் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் ஊர் பொதுமக்களும், பள்ளி குழந்தைகளும் இந்த தரைப்பாலத்தில் செல்ல முடியாத நிலையில் நீர் நிரம்பி செல்கிறது. அவ்வழியாக செல்லும் வாகனங்களும் கரையை கடக்க சிரமப்படுகிறது. எனவே இந்த தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பார்களா?

மேலும் செய்திகள்