நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் தொடர் மழையின் காரணமாக சேந்தமங்கலம் அருகே பொம்மசமுத்திரம் ஏரி நிரம்பியது. தற்போது இந்த ஏரியில் அதிகளவில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. இதனால் ஏரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விளைநிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் சூழல் உள்ளது. எனவே ஏரியில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரகுநாதன், காந்திபுரம், நாமக்கல்.