குளத்தை தூர்வார வேண்டும்

Update: 2022-07-31 14:10 GMT

திருவட்டார் பேரூராட்சி உட்பட்ட கொல்வேல்-தெற்றிகோடு சாலையோரத்தில் பெருங்குளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், குளிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தி வந்தனர். முறையாக பராமரிக்காததால் தற்போது குளத்தில் ஆகாய தாமரை செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. மேலும், கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றமும் வீசி வருகிறது. இதனால், குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வராஜ், தெற்றியோடு.


மேலும் செய்திகள்