அரியலூர் மாவட்டம், செந்துறை பஸ் நிலையம் அருகில் சித்தேரி உள்ளது. இந்த ஏரியை சுற்றி சமூக ஆர்வலர்கள் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது ஏரிக்கரை முழுவதும் காய்கறி கடைகள் மற்றும் பூக்கடைகள் அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். அதேபோல் ஆட்டோக்களும் ஆக்கிரமிப்பு செய்துள்ளன. இதனால் சித்தேரி காய்கறி கழிவுகளால் அசுத்தமாகி வருகிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.