நாங்குநேரி தாலுகா மூலைக்கரைப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட தங்கநகர் அருகில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் இந்த சுகாதார வளாகம் திறக்கப்படாமல் காட்சிப்பொருளாகவே இருக்கிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த சுகாதார வளாகத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.