திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் குச்சிபாளையம் தெரு உள்ளது. இந்த தெருவில் நேரத்தை காட்டும் விதமாக சங்கு உள்ளது. இந்த சங்கு அதிகாலை, மதியம், மாலை என பொதுமக்கள் நேரத்தை அறிந்து கொள்ள வசதியாக இருந்தது. தற்போது இந்த சங்கு பழுதடைந்து காணப்படுகிறிது. பழங்காலத்தில் இருந்து ஒலிப்பட்ட சங்கு தற்போது ஒலிக்காமல் இருப்பது பொதுமக்களை வேதனையடைய செய்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பழமை மாறாமல் சங்கு ஒலிக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.