மதுரை மாநகராட்சி புது விளாங்குடி அருகே செம்பருத்தி நகர் சாலை நேற்று பெய்த மழையால் நீர் சூழ்ந்து வெள்ளம் போல் காட்சி அளிக்கிறது. சாலையில் இருந்து வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள்.மேலும் தேங்கிய மழைநீரால் அப்பகுதியில் சுகாதார கேடு அடைய வாய்ப்பு உள்ளது. தேங்கிய மழைநீரை அதிகாரிகள் உடனடியாக அகற்ற வேண்டும்.