தென்தாமரைகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட புன்னையடியில் காட்டுவிளை சந்திப்பில் இருந்து இடதுபுறமாக அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரிக்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையோரத்தில் அமைந்துள்ள கால்வாய்யின் கரை பகுதி பல இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கால்வாய் கரையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.கிங்ஸ்டன் தர்மராஜ், புன்னையடி.