கோவை சிங்காநல்லூர் ஹவுசிங் யூனிட் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சமுதாய கூடம் மூடப்பட்ட நிலையில் உள்ளது. இதுவரை அந்த சமுதாய கூடம் திறக்கப்படவில்லை. இதனால் அங்கு சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. மேலும் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டிய சமுதாய கூடம் வீணாகி கிடக்கிறது. எனவே அதை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.