சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பெரிய கண்மாய் கறை மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. கருவேல மரங்களால் கண்மாயின் நீர் இருப்பு குறைந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்களின் விவசாயம் போன்ற தொழில் வளங்கள் பாதிக்கப்படுகிறது. எனவே கண்மாயில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றுவதுடன், கண்மாயை சுற்றி பயன்தரும் மரங்களை வளர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.