சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்த சிங்கிரிப்பட்டி ஊராட்சியில், மாங்காடு நீரேற்று நிலையம் அருகில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. அந்த நிழற்கூடத்தை சுற்றிலும் செடி,கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. அதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் நிழற்கூடத்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதர்களை அகற்றி நிழற்கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
-சீ.சென்னகிருஷ்ணன், சிங்கிரிப்பட்டி, சேலம்.