நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் சேளூர்-கந்தம்பாளையம் மெயின் ரோட்டில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சேளூர் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது இந்த கட்டிடம் சேதமடைந்து ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் கட்டிடத்தின் மேல் பகுதியில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்கள் தண்ணீரில் நனைந்து வீணாகும் நிலை உள்ளது. எனவே ஊராட்சி மன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சக்திவேல், சேளூர், நாமக்கல்.